world

img

ஒமிக்ரான் வைரஸால் மேலும் பல நாடுகள் பாதிக்கப்படும்: உலக சுகாதார நிறுவனம்

உலகில் 23 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவிய நாடுகளுடனான போக்குவரத்து தடை செய்யப்பட்டு வரும் அதே வேளையில் வெளிநாட்டு பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒமிக்ரான் பரவல் குறித்து புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ் உலகில் 23 நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் உலகின் கவனத்தை திருப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

;