world

சீனாவுக்கு ஈரான் எண்ணெய்

பெய்ஜிங், ஜூன் 23- ரஷ்யாவிடமிருந்து அதிகமான அளவில் எண்ணெய் வாங்கினாலும், சீனாவுக்குத் தாங்கள் அனுப்பும் எண்ணெய் அளவு குறையவில்லை என்று ஈரான் அறிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, 2 லட்சத்து 60 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் அடங்கிய சரக்குக் கப்பல் சீனா சென்றடைந்துள்ளது. 20 லட்சம் பீப்பாய்கள் அடங்கிய இந்த சரக்கு சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஜான்ஜியாங் துறைமுகத்தில் இறக் கப்பட்டிருக்கிறது.  இந்த சரக்கு சீனா சென்றடைந்த தை அமெரிக்காவில் உள்ள ஈரான் எதிர்ப்புக் குழுதான் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஈரான் மீதான  அமெரிக்கத் தடைகளை மீறி எப்படி வர்த்தகம் நடக்கிறது என்பதை அக் குழு கண்காணித்துக் கொண்டிருக்கி றது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதி யில் ஈரானிலிருந்து ஒரு நாளைக்கு 10 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் சீனாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;