world

img

அவசர நிலை அகற்றம்

குயிட்டோ, ஜூன் 27- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் பழங்குடி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ள ஈக்குவடார் அரசு, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டதையும் திரும்பப் பெற்றுள்ளது. பெரும் எழுச்சியுடன் பழங்குடி மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தைக் கட்டுக் குள் கொண்டு வர ஈக்குவ டாரின் ஆறு மாகாணங் களில் அவசர நிலையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி கில்லர்மோ லஸ்ஸோ ஆணை பிறப்பித்தார். இரண்டுவாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பழங்குடி மக்களின் போராட்டம் இந்த அவசர நிலை ஆணையால் கட்டுக்குள் வரவில்லை. எரிவாயு விலை குறைப்பு, விவசாயப் பொருட்களுக்கு நிலையான நிலை மற்றும் கல்விக்கு கூடுதல் நிதி ஆகிய கோரிக்கைகள் அனைத்துப் பிரிவினரின் ஆதரவையும் பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவித்ததால், வேறு வழியின்றி அவசரநிலையைத் திரும்பப் பெற்று, பேச்சுவார்த்தைக்கும் அழைப்புவிடுத்தது.

;