world

img

பேரிடர்களை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு திட்டம் : பிரேசில் வெளியீடு

பிரேசிலியா, மே.9- பிரேசில் இடதுசாரி ஜனாதிபதி  லூலா பேரழிவு தடுப்பு திட்டங்களுக்காக  சுமார் 33.4 கோடி அமெரிக்க டாலர்க ளும் பேரிடர் காலத்தை எதிர்கொள் ளும் வகையிலான கட்டுமான திட்டங்க ளுக்காக சுமார் 360  கோடி அமெரிக்க டாலர்கள்  மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்களை வெளியிட்டுள்ளார்.  தொடர்  புயல்கள் மற்றும் வெள்ளத் தால் பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டேவில்  100 பேர் வரை மரணமடைந்துள்ளார். தொடர்ச்சி யான நிலச்சரிவுகளால்  சுமார் 91 நக ரங்கள்  அதிக ஆபத்துள்ள பகுதிகள் என அந்நாட்டு  அரசால் வகைப்படுத் தப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிக மான வீடுகள் முழுமையாகவோ பகுதி யாகவோ இடிந்துள்ளன.  இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.  அம்மாநிலத்தில் உள்ள 497 நகரங்க ளில் 414  நகரங்கள் குறிப்பாக அர்ஜெண் டினா மற்றும் உருகுவே  எல்லையோர பகுதிகளில் உள்ள  விவசாய மற்றும் கால்நடை உற்பத்தியாளர்கள்  புய லால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். இந்த பேரிடரால் அந்நாட்டில் இது வரை 90.4 கோடி அமெரிக்க டாலர்கள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக் கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரியோ கிராண்டே டோ மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு நம்  அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை என அந்நாட்டின் ஜனாதிபதி லுலா டா சில்வா தெரிவித்துள்ளார். இந்த பேரழிவில் இருந்து நாம்  நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் வரும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலும், பொது மக்களின் சொத்துக்கள் மற்றும் தங்கு மிடங்கள் சேதமடைவதை குறைக்க வும், உயிரிழப்புகளை தடுக்கவும் பேரி டர்களை எதிர்கொள்ளும் வகையி லான கட்டமைப்புகளை மேம்படுத்திடும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.  இந்த திட்டத்திற்கான நிதியும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத் தில் பேரிடர் தடுப்பு,குடிநீர் விநியோ கம், நகரமயமாக்கல், நிலத்தை முறைப் படுத்துதல், பொதுப் போக்குவரத்து, கப்பற்படையை மேம்படுத்துதல் ஆகியவையும் உள்ளடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

;