எஸ்சேகுய்போ பிராந்தியத்திற்கு தலைநகரம் அறிவிப்பு
வெனிசுலா அரசு எஸ்சேகுய்போ பிராந்தியத்தில் டுமெரெரோ வை தலைநகராகவும் அறிவித்துள்ளது. குடி மைப் பதிவு அலுவலகத்தை திறந்து மக்க ளுக்கு குடியுரிமை வழங்கி வருகிறது.எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலாவின் அப் பகுதி அண்டை நாடான கயானாவுடன் பல ஆண்டுகால பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ளது. தற்போது அப்பகுதியை மிகவேக மாக தன் நாடுடன் இணைக்க சட்டப்பூர்வப் பணிகளை செய்து வருகிறது.
அஜர்பைஜான்-அர்மீனியா கைதிகள் பரிமாற்றம்
அஜர்பைஜான்-அர்மீனியா போர் துவங்கிய பிறகு, ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்படிக்கைக்கு பின் தற்போது முதல் முறையாக இரு நாடுகளு க்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அஜர்பைஜான் 32 அர்மீ னிய இராணுவ வீரர்களையும்,அர்மீனியா இரண்டு அஜர்பைஜான் இராணுவ வீரர்க ளையும் விடுவித்துள்ளன என அஜர்பைஜா னின் போர்க் கைதிகளுக்கான மாநில ஆணை யம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் சுகாதார நிதி நெருக்கடி
ஐரோப்பிய நாடுகளில் உள்ள லட்சக்க ணக்கான மக்கள் தங்கள் மருத்து வக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் சுகாதாரம் தொடர்பான நிதி நெருக்கடியில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பியர்கள் 40 சதவீதத்தி ற்கும் அதிகமாக மருத்துவத்திற்கு செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் இது முக்கிய மான சுகாதார நிதி நெருக்கடி எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
காசாவில் சுகாதாரப் பேரிடர்
காசாவில் 3,27,000 பாலஸ் தீனர்கள் தொற்று நோய் பாதிப்பின் காரணமாக சுகாதார மையங்க ளுக்கு மருத்துவ உதவி பெற வந்துள்ளதாக காசா மருத்துவ அமைச்சக செய்தி தொ டர்பாளர் அல்-குத்ரா செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.மேலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவ தால் பலரும் வெளியே வர அச்சம் கொண்டுள் ளதால் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைக்கடத்தி உற்பத்தியில் கால்பதிக்கும் வியட்நாம்
அடுத்த 30-50 ஆண்டுகளுக்கு வியட்நாமின் முக்கியமான அடிப்படை தேசியத் தொழிலாக குறைக் கடத்திகள் (semiconductors ) துறை இருக்கும் என்று வியட்நாம் தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.மிகவேகமாக வளரும் தொழில் நுட்ப உலகில் முன்னேறி செல்ல குறைக்கடத்தி உற்பத்தி முக்கிய பங்கு வகிப்பதால் இத்துறையில் கால் பதிக்க வியட்நாம் திட்டமிட்டுள்ளது.