வாஷிங்டன், செப். 20 - அமெரிக்காவின் 3 மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெலாண்டிஸ் ஆகிய 3 தொழிற்சாலைகளிலும் 14 தேதி இரவு 12 மணியிலிருந்து வரலாற்று வேலைநிறுத்தம் தொடங்கியது. அமெரிக்காவின் யுனைடட் ஆட்டோ வொர்க்கர்ஸ் யூனியனின் (UAW-United Auto Workers Union) வாகன உற்பத்தி நிலையங்களில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலா ளர்களை உறுப்பினர்களாகக் கொண் டுள்ளது. 1930லேயே முதன் முத லாக உள்ளிருப்பு போராட்டம்(Sit-in) நடத்தி வெற்றி கண்ட தொழி லாளர்கள் ஊர்தி உற்பத்தி நிறுவன ஊழியர்கள். இந்த முறை வேலை நிறுத்தத்தின் பெயர் ஸ்டாண்ட் அப் ஸ்டரைக் (Stand-up Strike). இந்த வேலை நிறுத்தத்தில் ஒரு தொழிற்சாலையின் அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட மாட்டார்கள். மாறாக, சில பகுதி தொழிலாளர்கள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் மற்ற பகுதி தொழிலாளர்கள் வேலையில் இருப்பார்கள். இந்த நிறுவனங்க ளில் சங்கிலித் தொடர் உற்பத்தி என்பதால் வாகனங்களின் உற் பத்தியை நிறைவு செய்ய முடியாது. அடுத்த நாள் வேறு சில பிரிவுகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர். தேவைப்படும் போது அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத் தத்தில் ஈடுபடுவர் என்று சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்க ளின் தொழிற்சாலைகள் மெக்சி கோவிலும் உள்ளதால் அங்கும் வேலை நிறுத்தம் நடக்கும் என்று சங்கம் அறிவித்துள்ளது.
சம்பள உயர்வு, ஓய்வூதியம், வேலை நிலைமைகளில் மேம்பாடு, பதவி உயர்வு ஆகிய முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள னர். போர்டு 20 சதவீதம் வரை ஊதியத்தை உயர்த்தித் தர முன் வந்துள்ளன. ஆனால், அவற்றை யுஏடபிள்யு(UAW) நிராகரித்துள் ளது. ஊதிய உயர்வு உடனடியாக 20% உயர்வும், அதற்குப் பிறகு ஒப்பந்தக் காலமான 4 ஆண்டுகளும் ஆண்டிற்கு 5% உயர்வு வேண்டு மென சங்கம் உறுதியாக போராடு கிறது. இந்த போராட்டம் துவங்கி ஆறு நாட்களாகியும் முழுமையான உடன்பாடுகள் எட்டாததால் தொழி லாளர்கள் போராட்டத்தை தொ டர்ந்து வருகின்றனர். வழக்கமான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது மற்றொரு முக்கிய பிரச்சனை. வாரத்திற்கு 32 மணி நேர வேலை என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. யுஏடபிள்யு சங்கம் தனது வெப் பக்கத்தில், கடந்த 10 ஆண்டுகளில் கார் உற்பத்தியாளர்கள் சுமார் 250 பில்லியன் டாலர்களுக்கு மேல் லாபம் பார்த்துவிட்டனர். 3 நிறுவ னங்களின் தலைமை நிர்வாக அதி காரிகள் கடந்த ஆண்டு பெற்ற ஊதியம் 30 மில்லியன் டாலர் என்று தெரிவித்துள்ளது.