world

பிப்.2-ல் பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

பெய்ஜிங், ஜன.23- பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் பிப்ரவரி 2 முதல் 4 நாள் வரை பெய்ஜிங், யான்சிங், சாங்ஜியாங் கோவ் ஆகிய 3 போட்டி தளங் களில் நடைபெற உள்ளது. பெய்ஜிங் குளிர்கால பார  லிம்பிக் தீபத் தொடரோட்டம் மார்ச் 2 முதல் 4 வரை நடைபெறஉள்ளது.   இத்தகவலை                                   பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் மற்றும் பாரா  லிம்பிக்  அமைப்பு குழு  21ஆம் நாள் தெரி வித்துள்ளது. இயந்திர மனிதன் மற்றும்  தானியங்கி வாகனம் தீபத்  தொடரோட்டத்தில் சேர்க்கப்படு வது நடப்பு தீபத் தொடரோட்டத் தின் சிறப்பு அம்சமாகும். குளிர் கால ஒலிம்பிக் பூங்காவில், இயந் திர மனிதர்கள் நீருக்கு அடி யிலுள்ள தீபத் தொடரோட்டத்தை நிறைவேற்றுவார்கள். இது ஒலிம் பிக் வரலாற்றில் முன்கண்டிராத சாதனையாக இருக்கும்.  மேலும், ஷோவ்காங் பூங்கா வில் தானியங்கி வாகனத்தின் மூலம் தீபத் தொடரோட்டத்தின் ஒரு பகுதி நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல்லாசாஹித் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி யின் அழைப்பை ஏற்று, 76ஆவது ஐ.நா பொது பேரவையின் தலைவர் அப்துல்லா சாஹித், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவிலும் தீபத் தொட ரோட்ட நிகழ்ச்சியிலும் பங்கெ டுக்கவுள்ளார். மேற்கண்ட தக வலை அவரது அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர்  ஜனவரி 20ஆம் நாள் அறிவித்தார். மேலும், டிசம்பர் மாத ஐ.நா  பொதுப் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டியின்போது போர்  நிறுத்தம் பற்றிய தீர்மானத்தைப் பின்பற்றுமாறு சாஹித்  பல்வேறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;