கருக்கலைப்பு குற்றம் அல்ல
கருக்கலைப்பை குற்றமாகக்கருதும் சட்டத்திற்கு எதி ராக 2 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் கருக்கலைப்பு செய்வதை தடுப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி கருக்கலைப்பை சட்டப்பூர்வ செயலாக அறி வித்துள்ளது மெக்சிகோ உச்ச நீதிமன்றம்.
அமெரிக்காவிடம் நிலையான பொருளாதாரம் இல்லை
2006 ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கப் பொருளாதா ரம் 3 சதவீதத்துக்கு மேல் வேகமாக வளரவில்லை 2006-2022 வரையிலான சராசரி ஆண்டு உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் மிக மோசமாக 1.76 சதவீதமாக இருந்தது. ஆனால் அமெரிக்காவின் கடன் 200 சதவீதத்துக் கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
பிரான்ஸால் எங்களைப் பிரிக்க முடியாது!
நாங்கள் இரண்டு மக்கள்,ஆனால் நாங்கள் சகோதரர் கள். பிரான்சால் உருவாக்கப்பட்ட எந்த எல்லையும் எங்க ளைப் பிரிக்க முடியாது என பர்கினா பாசோவில் உள்ள ஆயிரக் கணக்கான மக்கள் நைஜர் மக்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தும் பிரெஞ்சு ராணுவத்தை வெளியேறக் கோரியும் போராட்டங்களை நடத்தினர்.
சவூதியில் சீனா வங்கி துவக்கம்
சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் யுவான் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க ஆசிய நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான தி பேங்க் ஆப் சீனா சவூதி அரேபியாவில் தன் முதல் கிளையை துவங்கியுள்ளது சீனா அரசாங்கம்.சவூதி அரசிடம் ஒப்புதல் பெற்று இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த வங்கி திறக்கப்பட்டது.
அமெரிக்காவை ஏமாற்றுகிறார் ஜெலன்ஸ்கி
உக்ரைன் போருக்கு ஆயுதம் வாங்க 13.5 கோடி டாலரை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்த நிலையில் உக் ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவை ஏமாற்றி தேவையான நிதியை பெற்றுக்கொள்கிறார் எனவும் 11 எதிர்க்கட்சி களை தடை செய்தது குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பா ளர் விவேக் ராமசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.