world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பெண் உரிமையை  மேம்படுத்த புதிய திட்டம்

பெண் உரிமையை மேம்படுத்தும் வகையிலான திட்டத்தை ஐ.நா  பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் மார்ச் 8 அன்று துவங்கி வைத்தார். பெண்கள் நலனை பாதுகாப்பதோடு பணி இடங்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப் பது, பாலின சமத்துவம் ஆகியவற்றை  நோக்க மாக கொண்ட இத்திட்டத்தை முறையாக அமல் படுத்த வில்லையெனில் 2030 ஆம் ஆண்டு 34 கோ டிக்கும் அதிகமான பெண்களும், பெண் குழந்தைக ளும் வறுமையில் இருப்பார்கள் என எச்சரித்துள்ளார். 

சுமத்ரா தீவில் கனமழை 19 பேர் பலி

இந்தோனேசியா  சுமத்ரா தீவில் கன மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 19 பேர் உயிரிழந்துள்ள னர். மேலும் ஏழு பேர் காணாமல் போயுள்ள னர். கனமழையால் தெற்கு கடற்கரை மலை யோர கிராமங்களில் பயங்கரமான மண் சரிவு  ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும்  பாறைகள் உருண்டு அங்கிருந்த ஆற்றை மூடியதால் வெள்ளம் கிராமங்க ளுக்குள் புகுந்து ஒட்டு மொத்தமாக கிராமங்க ளை சேதப்படுத்தியுள்ளது. 

தலிபான்களுக்கு எதிராக  பெண்கள் போராட்டம் 

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீதான தலிபான்களின் ஒடுக்கு முறைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வி, வேலை, பொது இடங்களுக்கு செல்வது, பொது கழிப்பிடங்க ளை பயன்படுத்துவது என பெண்களின்  உரி மைகள் அனைத்திற்கும் கடுமையான தடை களை  தலிபான் அரசு  விதித்துள்ளது. இச்சூழ லில் பெண்கள் தங்களின் அடிப்படை உரிமை களை பெறுவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பாக்.ஜனாதிபதி  ஜர்தாரிக்கு ஜின்பிங் வாழ்த்து

பாகிஸ்தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிப் அலி ஜர்தாரிக்கு சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். நமது இரு நாடுகளுக் கும் இடையிலான உறுதியான  நட்பு வரலாற்று தேர்வு என்றும் இது முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் தெரிவித்தார். மேலும் உலகின் ஏற்பட்டு வரும் தற்போதைய அரசியல் மாற்றங் களில் மிகவும் முக்கியமானது என்றார். ஆசிப் அலி  இரண்டாவது முறையாக பாகிஸ்தான் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.

ஐ.நா.வுக்கு  ஈரான் கண்டனம் 

மாசா அமினி மரணம் குறித்து ஐ.நா வெளியிட்ட அறிக்கைக்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கை உண்மையற்றது எனவும் ஒரு பக்க  சார்புடையது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாசர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா உண்மை கண்டறியும்  அறிக்கையில் 2022 ஆம் ஆண்டு கட்டாய ஹிஜாப் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது மாஷா அமினி என்ற பெண் கொலை செய்யப்பட்டதற்கு ஈரான் அரசே காரணம் என குறிப்பிட்டிருந்தது.