world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக  தலிபான் படை 

ஆப்கானிஸ்தானில் இருந்து ஃபதே மியோன் ராணுவப் பிரிவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான்கள் சிரியாவில் முகாமிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் லெபனானின்  ஹிஸ் புல்லா படை மீது  இஸ்ரேல் முழுஅளவிலான போரைத் துவங்கி னால் தலிபான்கள் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவாக போரிடுவோம் என அவ்வமைப்பு அறிவித்திருந்தது.போரின் தீவிரம் அதிகரித்துள்ள சூழலில்  தலிபான் படை சிரியாவில் முகாமிட்டுள்ளது. தலிபான்களி டம் 20 லட்சம் ரிசர்வ் படையினர் உள்ளனர்.

காசா மாணவர்களுக்கு  பாகிஸ்தான் கல்வி உதவி 

காசாவில் இருந்து வரும் பாலஸ் தீன மருத்துவ மாணவர்களுக்கு கல்வியைத் தொடர பாகிஸ்தான் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மருத்துவ மற்றும் பல் மருத்துவ கவுன்சிலின் (பிஎம்டிசி) வெளியுறவு பிரிவின் உத்தரவின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 100 மாணவர்களுக்கு உதவி அளிக்கப்பட உள்ளது. எனினும் எத்தனை மாணவர்கள் பாகிஸ்தான் வர உள்ளனர் என தெரி விக்கப்படவில்லை.

லை. ஐரோப்பாவை நோக்கிச் சென்ற  89 பேர் கடலில் மூழ்கி பலி

மொரிட்டானியா கடற்கரை அருகே புலம்பெயர்ந்தோர் பயணித்த படகு கவிழ்ந்து 89 பேர் பரி தாபகரமாக பலியாயினர். அவர்களின் உடல்களை அந்நாட்டு கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர். ஆறு நாட் களுக்கு முன்பு செனகல்-காம்பியா எல்லையில் இருந்து ஐரோப் பாவை நோக்கி  மீன்பிடி படகில் கிட்டத்தட்ட 170 பேர் புலம் பெயர்ந்த நிலையில் மொரிட்டானியா கடற்கரையில் இருந்து 4 கி.மீ தூரத்தில் அப்படகு கவிழ்ந்துள்ளது. ஐந்து வயது சிறுமி உட்பட ஒன்பது பேரை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளனர்.