world

ராணியின் ஊழியர்கள் வேலை நீக்கம்?

லண்டன், செப்.23 - மறைந்த ராணி இரண்டாம் எலிச பெத்துடன் பணியாற்றிய ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணியின் சொந்தப் பணிகளைக் கவனிப்பதற்காக ஏராளமான ஊழி யர்கள் இருந்து வந்தனர். அவர்களில் சுமார் 100 பேருக்கு வேலை நீக்கக் கடிதம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. கடந்த வாரமே இதுகுறித்து அந்த  ஊழியர்களிடம் சொல்லப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இதுகுறித்த ஆலோசனைகள் நடத்தப்படுவதாக எழுதியிருக்கிறார்கள். அரச மாளிகையின் நிர்வாகத்தை  கவனிக்கும் உயர் அதிகாரிகளில் ஒரு வரான மைக்கேல் ஸ்டீவென்ஸ் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். மிகவும் சவாலான நேரத்தில் இந்த முடிவை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்று எழுதியுள்ளார். இந்தக் கடிதம் ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் மார்க் செர்வோட்கா கூறுகையில், “எங்கள் உறுப்பினர்கள் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். பல ஆண்டுகள் ராணிக்காக உழைத்த இவர் கள் கைவிடப்பட்டதாகக் கருதுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த நட வடிக்கையின் பின்னணியில் அரசராக பதவியேற்கவிருக்கும் மூன்றாம் சார்லஸ் இருப்பதாகக் கூறப்படுகிறது. தனக்கு விசு வாசமான ஊழியர்களை அவர் நிய மிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;