world

img

ஆஸி.சுழற்பந்து நாயகன் ஷேன் வார்னே காலமானார்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே (52) காலமானார்.

கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்து விச்சாளரான ஷேன் வார்னே (52) மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.

ஆஸ்திரேலியா அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய வார்னே 145 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 708 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீர்ர் ஆவார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வந்த வார்னேவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

ஐபிஎல் டி20 போட்டிகளில் ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது