சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறி வருவதை ஆப்பிரிக்க ஒன்றியம் கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளது. ரஃபா எல்லையில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான இனப்படுகொலையில் இருந்து மக்களை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஐ.நா. உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.