ஜோகன்னஸ்பெர்க் : ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சி மற்றும் உணவு தேவையை சமீபகாலமாக சீனா மற்றும் ரஷ்யா பூர்த்தி செய்து வருகின்றன. ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் 400 ஆண் டுகளாக ஆப்பிரிக்காவை காலனி களாக வைத்து வளங்கள் அனைத் தையும் சுரண்டுகின்றன. இதற்கு மாறாக சீனா, ஆப்பி ரிக்கா உடன் நல்லுறவை பேணு கிறது.இதுவரை ஆப்பிரிக்கா விற்கு ஆறாயிரம் கிலோ மீட்டர் கள் நீளத்திற்கு ரயில் பாதைகள் சாலைகளை அமைத்துக் டுத்து நாட்டின் போக்குவரத்தை மேம்படுத்தியதோடு ,சீனா கட்டமைத்து கொடுத்த இருபது துறைமுகங்கள் , வணிக பரி வர்த்தனைகளை ஊக்குவிக்கின் றன.மேலும் ஆப்பிரிக்க குழந்தை களின் கல்வியை மேம்படுத்தவும் மக்களின் சுகாதாரத்திற்கும் 170 பள்ளிக்கூடங்கள் மற்றும் 130 மருத்துவமனைகளை கட்டிக்கொடு த்துள்ளது.இவை மட்டுமின்றி 45 விளையாட்டு மைதானங்கள் 80 மின் உற்பத்தி மையங்கள் என வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.