ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் ஹெராட் நகரின் வடமேற்கில் 35 கிமீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பேரிடர் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக், ராய்ட்டர்ஸுக்கு அனுப்பிய செய்தியில், இறந்தவர்களின் எண்ணிக்கை 2,445 ஆக உயர்ந்துள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2000-க்கும் மேல் அதிகரித்துள்ளது,1,320 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் சயீக் கூறினார்.
ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதியில் பத்து மீட்புக் குழுக்கள் இருப்பதாக சயீக் கூறினார்.