world

img

அமெரிக்கா விசா நடைமுறையில் மாற்றம்  இந்தியர்களுக்கு நெருக்கடி

அமெரிக்கா விசா நடைமுறையில் மாற்றம்  இந்தியர்களுக்கு நெருக்கடி

புதுதில்லி/வாஷிங்டன்,செப்.8- அமெரிக்காவுக்கு குடியேற்றமற்ற விசாக்களுக்கு இனிமேல் இந்தியர்கள் தங்களது சொந்த நாட்டில் மட்டுமே நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய முடியும் என அந்நாட்டு அரசு அறி வித்துள்ளது.  கொரோனா பெருந் தொற்றுக்குப் பிறகு, இந்தியாவில் அமெ ரிக்க விசா நேர்காண லுக்கான காத்திருப்பு காலம் மூன்று ஆண்டு கள் வரை நீண்டது. இதனால் அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டிய இந்தியர்கள், தாய்லாந்து, சிங்கப்பூர் ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து, அங்குள்ள அமெரிக்கத் தூதரகங்களில் நேர்கா ணல் தேதியைப் பெற்று வந்தனர். குறிப்பாக, வர்த்தகம் மற்றும் சுற்றுலா விசாக்க ளுக்கு பாங்காக் மற்றும் பிராங்பர்ட் நகரங்களும், தற்காலிகப் பணியாளர் விசாக்களுக்கு பிரேசில் மற்றும் தாய்லாந்து நகரங்களும் முக்கிய மையங்களாக விளங்கின.  இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் விசா விதிகளில்  கடுமையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய உத்தரவின்படி, குடியேற்றமற்ற விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், இனி தங்களது சொந்த நாட்டில் அல்லது தாங்கள் சட்டப்பூர்வமாக வசிக்கும் நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில்தான் நேர்காணலுக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என அமெரிக்க வெளி யுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நடைமுறையால் இந்தியர்கள் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.