world

img

தென் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி வேட்பாளர்கள் ஜனாதிபதிகளாக தேர்வு

  1.     ரஷ்யாவை பலவீனப்படுத்துவதே முக்கிய நோக்கம் என பெண்டகன் கூறியுள்ளது. உக்ரைன் போரில் அமெரிக்காவின் நோக்கம் என்ன என்பது வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது. 
  2.     ஜெர்மனியில் 90 சதவீத நிறுவனங்கள் தமது பொருட்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. ரஷ்ய எரிபொருளை ஜெர்மனி நிறுத்தியதே இதற்குக் காரணம்!
  3.     அமெரிக்காவும் பிரிட்டனும் உக்ரைனை சமாதானப் பாதையிலிருந்து விலக்கி அழிவை நோக்கி தள்ளுகின்றன என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
  4.     உக்ரைன் போருக்கு இடையே சம்ராட் எனப்படும் மிகவும் வலிமை வாய்ந்த ஏவுகணையை ரஷ்யா சோதித்து உள்ளது. சில நொடிகளில் ஐரோப்பாவின் பல தலைநகரங்களை தாக்கவல்ல இந்த ஏவுகணை எந்த ராடரின் கண்ணுக்கும் புலப்படாது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இது ஐரோப்பாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?
  5.     அணு ஆயுதப் போர் வரக்கூடாது எனவும் அத்தகைய போர் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று எனவும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் கூறியுள்ளார். ஆனால் அத்தகைய ஆபத்து
  6. உண்மையானது எனவும் எச்சரித்துள்ளார்.
  7.     ரஷ்யாவின் பல பத்திரிகையாளர்களை கொலை செய்ய உக்ரைன் நாஜிக்கள் திட்டமிட்டுள்ளனர். அதை நிறைவேற்ற மாஸ்கோ வந்த கூலிப்படையினரை ரஷ்யா கைது செய்துள்ளது. கூலிப்படையினருக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பயிற்சி அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
  8.     ரஷ்யப் படைகளுக்கு உதவி செய்யும் உக்ரைனியர்கள் நீதி விசாரணை இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்படுவார்கள் என நிக்கலவ் பகுதியின் கவர்னர் விடாலி கிம் எச்சரித்துள்ளார். உக்ரைனின் ராணுவ ரகசிய இடங்கள் ரஷ்யாவுக்கு எப்படி தெரிகின்றன என்பது உக்ரைனுக்கு தலைவலியாக உள்ளது.
  9.     போர்க்களத்திலும் பொருளாதாரத் தளத்திலும் ரஷ்யாவை முடக்க மேற்கத்திய நாடுகள் வெற்றிபெற முடியாத காரணத்தால் இப்பொழுது பயங்கரவாதத்தை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த தொடங்கியுள்ளனர் என புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
  10.     ரஷ்யா- உக்ரைன் எல்லையில் ரஷ்ய பகுதியில் உள்ள சில கிராமங்களையும் எண்ணெய்க் கிணறையும் உக்ரைன் தாக்கியுள்ளது. இது ரஷ்யத் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  11.     ரஷ்ய வர்த்தகத்தை குப்பையில் தூக்கிப் போடுமாறு இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியத்  தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மோடியை சந்தித்த பொழுது  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.