world

img

சீனா மீது அவதூறு பரப்புவதை நிறுத்துங்கள்!

கீவ், ஜூன் 6- ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதல் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவதால் அமைதிக்கான முயற்சிகள் தடைபடும் என்று அமெரிக்க நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு உக்ரைன் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்த யூரேசிய விவகாரங்களுக்கான சீன அரசின் நிரந்தரப் பிரதிநிதி லி ஹுய், கடைசிச் சுற்றில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றார். எந்தவித உண்மைத் தகவல்களின் அடிப்படையில் இல்லாமல் திரிக்கப்பட்ட செய்தி களை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் வெளி யிட்டது. போரை நிறுத்துவதற்கான முயற்சி களைக் கலைக்கும் வகையிலும், எரியும் தீயில்  எண்ணெய் ஊற்றும் நோக்கத்திலும்தான் அமெரிக்க ஊடகம் செயல்பட்டிருக்கிறது. தனது  கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் முயற்சி யும் நடந்துள்ளது. “ஐரோப்பாவில் உள்ள அமெரிக்காவின் கூட்டாளிகள் தங்கள் சுயாட்சியை உறுதிப் படுத்திக் கொள்ளும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

உடனடியாகப் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டும். தற்போது தன் வசம் இருக்கும் உக்ரைனின் பகுதிகளை ரஷ்யாவிடம் விட்டுவிட வேண்டும்” என்ற செய்தியை சீனப் பிரதிநிதி ஐரோப்பியப் பயணத்தின்போது அனைத்து நாடுகளிடமும் வலியுறுத்தியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது. இதன் மூலமாக மேற்கத்திய நாடுகள் மத்தியில் பிளவை ஏற்படுத்த சீனா முயல்வதாகவும் குற்றம் சாட்டியது. இந்தச் செய்தி வெளியானவுடன், அது பொய்ச்செய்தி என்று மற்ற ஐரோப்பிய நாடுகள் சொல்வதற்கு முன்பாக, உக்ரைன் அத்தகைய செய்தியைக் கண்டித்தது. அத்தகைய செய்தி யுடன் சீனாவின் பிரதிநிதி ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவில்லை என்று உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மறுப்பு தெரிவித்தார். வால் ஸ்ட்ரீட் நாளிதழில் அந்த செய்திக் கட்டுரை வந்த வுடன், ஒரு வீடியோ மூலமாகத் தனது மறுப்பை  குலேபா வெளியிட்டார்.  அந்த மறுப்பை அவர் வெறுமனே வெளியிட வில்லை. நாளிதழின் செய்திக் கட்டுரையைப் படித்தவுடன், மற்ற ஐரோப்பிய நாடுகளின் வெளி யுறவுத்துறை அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு குலேபா பேசியிருக்கிறார். நாளிதழில்  வந்திருப்பது போன்ற எந்தவொரு செய்தியுட னும் சீனப்பிரதிநிதி தங்களைச் சந்திக்கவில்லை என்று அனைத்து ஐரோப்பிய நாடுகளின் வெளி யுறவுத்துறை அமைச்சர்களும் உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள். அதன் பின்னரே அவர் நாளித ழில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மவுனம் காக்கும் ஊடகம்

உக்ரைனே மறுக்கும் அளவுக்கான பொய்ச்  செய்தியை வெளியிட்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல், மறுப்புச் செய்தி எதையும் வெளியிடவில்லை. அதைப் பற்றிப் பேசாமல் மவுனமாக இருக் கிறது. இத்தகைய பொய்களை வேண்டுமென்றே அவிழ்த்து விடுகிறார்கள். இவர்களுடைய பொய்கள் அமெரிக்க அரசியல்வாதிகளுக்குத் தீனி போடுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சுதந்திரம் என்பது வதந்தி களைப் பரப்புவதற்கான சுதந்திரம்தான் என்று  அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான மோதலில் சீனாவும், அமெரிக்காவும் வெவ்வேறு கோணத்தில் அணுகுகின்றன. எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை அமெரிக்கா செய்து வருகிறது. போர் நீடிக்க வேண்டும் என்ற  எண்ணமே அவர்களுக்கு உள்ளது. இதன் மூலம் தனது தலைமையிலான நேட்டோ கூட்டணியை விரிவாக்கம் செய்வதே அவர்களது நோக்க மாகும். சீனாவைப் பொறுத்தவரையில், அமைதிக் கான பேச்சுவார்த்தையை முன்னிறுத்துகிறது. 12 அம்சத் திட்டத்தை இருதரப்புக்கும் வழங்கி யிருக்கிறது.
 

;