world

img

உலகில் கோடீஸ்வரர்களை அதிகம் கொண்ட நாடுகளில் மூன்றாமிடத்தைப் பிடித்த இந்தியா!

வாஷிங்டன், ஏப். 11 - அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வணிக  ஏடான ‘போர்ப்ஸ்’, உலகப் பெரும்பணக் காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 77 நாடுகளைச் சேர்ந்த 2640 பெரும்பணக்காரர்கள் இடம்பிடித்துள்ளனர்.  1 பில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 200 கோடி  ரூபாய் ஆகும். இவ்வாறு ரூ. 8 ஆயிரத்து 200 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்டவர்களே உலகில் பில்லியனர்களாக, பெரும் பணக்காரர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். அந்த வகையில், உலகில் ரூ. 8 ஆயிரத்து 200 கோடிக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்புள்ள பெரும்பணக்காரர்களை கொண்ட நாடாக அமெரிக்கா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.  உலகில் மொத்தமுள்ள 2640 பெரும்பணக்காரர்களில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமானோர், அதாவது 735 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.  எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ்  உள்ளிட்டோர் இவர்களில் குறிப்பிடத்தக்க வர்கள் ஆவர்.  வழக்கமாக அமெரிக்கர் ஒருவரே ‘உலகின்  நம்பர் ஒன்’ பணக்காரர் என்ற இடத்தைப் பெறுவார். இந்த இடத்தை மட்டும் அமெரிக்கா இழந்துள்ளது. அந்த இடத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்டிடம் இழந்துள்ளது. மற்றபடி தனது ஆதிக்கத்தை அமெரிக்கா நிலைநாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பெரும் பணக்காரர்களைக் கொண்ட நாடாகச் சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனாவில் மொத்தம் 495 பெரும் பணக்காரர்கள் உள்ளனர்.

இருப்பினும், கடந்தாண்டுடன் ஒப்பிடு கையில் இந்த எண்ணிக்கை சற்று குறை வாகும். சீனாவில் கடந்தாண்டு 539 பெரும்  பணக்காரர்கள் இருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது 495 ஆகியுள்ளது. இந்த வரிசையில்தான், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தியா வில் 169 பெரும் பணக்காரர்கள் உள்ளதாக ‘போர்ப்ஸ்’ ஏடு கூறியுள்ளது. இந்த 169 பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த நிகர சொத்து மதிப்பு 675 பில்லியன் டாலர் என்றும் ‘போர்ப்ஸ்’ மதிப்பிட்டுள்ளது.  எனினும் இது கடந்த ஆண்டை 75 பில்லியன் டாலர் குறைவு என்று கூறப்படு கிறது. ஏனெனில், அதானி குழுமம், 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக, ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை வெளியான பின்னணியில், அந்த குழுமத்தின் முதலாளி கவுதம் அதானி சுமார் 43 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை இழந்தார். அதுவே இந்திய பெரும்பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பிலும் சற்று சரிவை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பட்டினி நாடுகள் பட்டியல், மகிழ்ச்சி குறைவான நாடுகள் பட்டியல், பாலின  சமத்துவம் குறைந்த நாடுகளின் பட்டியல்.. என பல்வேறு பட்டியல்களில் மிகவும் மோசமான இடத்தில் இருக்கும் இந்தியா, அதிக பெரும்பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் மட்டும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு அடுத்ததாக அதிக பெரும் பணக்காரர்களைக் கொண்ட நாடுகள்  பட்டியலில் ஜெர்மனி நான்காவது இடத்தை யும், ரஷ்யா 5-ஆவது இடத்தையும் பெற்றுள் ளன. ஜெர்மனியில் கடந்தாண்டு 134 பெரும் பணக்காரர்கள் இருந்த நிலையில், அது இந்தாண்டு 126 ஆக குறைந்துள்ளது. இதேபோல ரஷ்யாவில் மொத்தம் 105 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். ரஷ்யாவில் இருக்கும் ஒட்டுமொத்த பெரும் பணக்காரர் களின் சொத்து மதிப்பு 474 பில்லியன் டாலர் ஆகும்.