world

img

நோபல் பரிசு: இலக்கியம்

ஸ்டோக்ஹோம்,  அக். 6 - உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம்,  இயற்பியல், வேதி யியல், இலக்கியம், பொரு ளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பில் அசத்தும் சாதனையாளர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பாண்டிற்கான (2022) மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலக்கியத் திற்கான நோபல் பரிசு  வியாழனன்று அறிவிக்கப் பட்டது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி  எர்னாக்ஸ்-க்கு இலக்கி யத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எல்  ஆகுபேஷன் (L’occu pation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக நோபல் பரிசு பெறுகிறார் அனி எர்னாக்ஸ். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டிலும், மற்ற பரிசுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் வழங்கப் படுகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் என இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கமும் நோப லுக்கு பரிசாக வழங்கப் படுகின்றன என்பது குறிப் பிடத்தக்கது.

;