அமெரிக்காவைச் சேர்ந்த ஐந்து ஆயுத நிறுவனங்களின் மீது சீனா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. தைவான் மற்றும் சீனாவின் உள் விவகா ரத்தில் தலையிடும் அமெரிக்காவிற்கு இத் தடை நடவடிக்கை கடுமையான எச்சரிக்கை யாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.மேலும் தைவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்வதால் இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது எனவும் கூறியுள்ளது.