world

img

“மார்க்சிய எதிர்ப்பு பள்ளிகளை இழுத்து மூடுங்கள்”

பிரேசிலியா,  ஜூலை 13- வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சானரோ  பதவியில் இருந்தபோது தொடங்கப்பட்ட மார்க்சிய எதிர்ப்புக் கல்வி நிலையங்களை இழுத்து மூடுமாறு பிரேசில் அரசு ஆணை யிட்டுள்ளது.  சட்டவிரோதமாக, அமெரிக்கா மற்றும் பிற அந்நிய சக்திகளின் உதவியுடன் பிரேசிலின் ஜனாதிபதியாக ஜெய்ர் போல்சானரோ பொறுப்பேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் அமேசான் காடுகளை அழிக்கும் பணி படு தீவிர மாக நடந்தது. அழிவுப் பணிக்குக் காவலாக ராணு வத்தையும், காவல்துறையையும் பயன்படுத்த அவர் தயாராக இருந்தார். அந்த இயற்கை  வளங்களை பன்னாட்டுப் பெரு நிறுவனங் களுக்குத் தாரை வார்ப்பதை விரைவுபடுத்த விரும்பினார். மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்ற போல்சானரோவின் விருப்பத்தை மக்கள் நிராகரித்தனர். இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்திய லூலா டி சில்வா தேர்வு செய்யப் பட்டார். பதவியேற்றதில் இருந்து நாட்டின் நலன்களை மீட்பதில் அவர் அக்கறை காட்டி  வருகிறார். பிற தென் அமெரிக்க நாடுகளுட னான உறவுகளுக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் அவர் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

போல்சானரோ ஜனாதிபதியாக இருந்த போது வேலைக்காக கற்பிப்போம் என்ற புதிய  முழக்கத்துடன் கல்வி நிலையங்கள் தொடங்கப் பட்டன. ராணுவத்திற்குத் தேவையான ஒழுக்கத்தைக் கல்வியுடன் சேர்த்துத் தரப் போவதாக அறிவித்தனர். அதே வேளையில், மார்க்சிய கலாச்சாரத்திற்கு எதிரான போதனை கள் அவர்களுக்குத் தரப்படும் என்றும் கூறினர். இத்தகைய பள்ளிகளை உருவாக்குவது அரசியல் நோக்கத்துடன்தான் என்பது இரண்டாவது அறிவிப்பில் அம்பலமானது. இந்தப் பள்ளிகளை மூடிவிடுமாறு ஜனாதிபதி லூலா டி சில்வா ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்த ஆணை வெளியிடுவதற்கு முன்பாக, இந்தப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை ஆய்வு மேற்கொண்டது. ராணுவ  முகாம்களில் இருக்கும் ஒழுக்கம் பள்ளியிலேயே தரப்பட வேண்டும் என்று இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது போல்சானரோ கூறியிருந்தார். ஆனால் கல்வித்துறை மேற்கொண்ட ஆய்வில் அத்தகைய ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 216 பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகள் தனிநபர்களால் நடத்தப் பட்டன. அதே வேளையில் ராணுவ வீரர்கள் இந்தப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தனர். பள்ளி களுக்கான விதிகளை அவர்களே உருவாக்கிக் கொண்டார்கள். இடதுசாரிக் கருத்துகள், குறிப்பாக மார்க்சியக் கோட்பாடுகளுக்கு எதிரான  போதனைகள் அங்கு வழங்கப்பட்டன.

இந்தக் கல்வியாண்டில் இருந்து அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் வீரர்கள் அவரவர் முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள். கல்வி யாண்டு நிறைவு பெறும் வரையில் பிற பள்ளி களுக்கான விதிகளே இங்கும் கடைப்பிடிக்கப்படும். பாடத்திட்டங்களும், பிற கல்வி நிலையங்களில் உள்ளவையே இங்கும்  கற்பிக்கப்படும் என்று கல்வித்துறை வெளி யிட்டுள்ள விரிவான ஆணையில் கூறப்பட்டி ருக்கிறது.  இந்த ஆணை மூலம் இடதுசாரிக் கோட்பாடு களுக்கு எதிரான வெறுப்புணர்வை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்று இடதுசாரி அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.