world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அரிய மண் காந்தங்கள்  ஏற்றுமதி தொடர்பாக விவாதிக்க திட்டம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அரிய மண்காந்தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சீனாவின் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடியாக சீனா தன் நாட்டிலிருந்து ஏற்று மதி செய்யப்படும்அரிய மண்காந்தங்களுக்கு ஏப்ரல் 4 அன்று கட் டுப்பாடுகள் விதித் தது. இது குறித்து சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் பிரேசிலில் நடை பெறும் உச்சி மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது என இந்தியா விற்கான பிரேசில் தூதர் தெரிவித்துள்ளார். 

காலக்கெடுவை நீட்டிக்கும்  திட்டம் இல்லை – டிரம்ப்

பெரும்பாலான நாடுகள் மீதான வரியை 90 நாட்க ளுக்கு அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஜூலை 9 க்குப் பிறகு அந்த காலக் கெடுவை நீட்டிக் கும் திட்டம் இல்லை என டிரம்ப் தெரிவித் துள்ளார். அமெரிக் காவுடன் ஒப்பந்தங் கள் ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால் அந்நாடுகளுக்கு ‘வாழ்த்துக்கள், நாங்கள் உங்களை அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப் போகி றோம். அதற்காக நீங்கள் இவ்வளவு வரி செலுத்த வேண் டும்’ என கடிதம் அனுப்புவோம் என தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனர்களுக்கான உணவுப்பைகளில்  போதை மாத்திரை கலப்பு

காசா பகுதியில் பாலஸ்தீனர்களுக்கு அமெரிக்கா அனுப்பிய மாவுப் பைகளுக்குள் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அதிர்ச்சியை கிளப் பியுள்ளது. இம் மாத் திரைகள் திட்டமிட்டு அந்த மாவுகளில் அரைத்து கலக்கப் பட்டு இருக்கலாம். இது பொது சுகாதா ரத்தின் மீது நேரடி யாக நடத்தப் படும் தாக்குதல். இனப்படுகொலையின் கொடூரமான வடிவமாக பாலஸ்தீனர்களை உள்ளிருந்து அழிக்கும் திட்டத்தின் வெளிப்பாடு என கண்டனங்கள் எழுந்துள்ளன. 

துருக்கியில் வேகமாகப் பரவும்  காட்டுத் தீ 

துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்மிரில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் காற்று பலமாக வீசுவதால் தீ வேகமாக பரவி வரு கிறது. இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணி யில் ஹெலிகாப்டர் கள், நூற்றுக்கும் மேற்பட்ட தீயணை ப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று அந்நாட்டு வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நான்கு கிரா மங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து அனை த்து மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ஊழல் குற்றச்சாட்டில் இருந்து நேதன்யாகுவை பாதுகாக்கும் டிரம்ப் 

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான நீதிமன்ற விசாரணையை தடுத்து டிரம்ப் அவரை காப்பாற்றி வருகிறார். நேதன் யாகுவும் அவரது மனைவியும் பல லட் சம் மதிப்புடைய பரி சுகள் வாங்கியது, இஸ்ரேல் ஊடகத் தை தனக்கு சாதக மாக நடந்து கொள்ள நிதி திட்டங்களை வழங்கியது உள்ளி ட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன. போரைக் காரணம் காட்டி அவர் தப்பித்து வரும் நிலையில் டிரம்ப், நேதன்யாகு மீதான குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக நீதி மன்ற விசாரணையில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்.