கடந்த ஆண்டு இந்திய மாணவி மீது அமெரிக்க காவலர் கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தகுந்த ஆதாரம் இல்லை என அவர் மீது கிரிமினல் வழக்கு பதியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த மாணவி பலியான காணொலிக் காட்சி அந்த காவலரின் சட்டை காமிராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. ஒரு வழக்கு விசாரணைக்காக அதிவேகமாக சென்ற போது சாலையை கடந்த அப்பெண்மீது காவ லர் கார் மோதியது குறிப்பிடத்தக்கது.