world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வடகொரியா அறிவிப்பு

வடகொரியா விற்குசென்ற ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அந்நாட்டு வெளியுற வுத்துறை அமைச் சர், அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோரை சந்தித்தார். இப்பயண முடிவில் உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு நிபந்த னையற்ற ஆதரவு வழங்குவோம் என வடகொரியா அறிவித்துள்ளது. இப்பயணத்தை முடித்துக்கொண்டு செர்ஜி சீனாவிற்கு சென்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை சந்தித்துள்ளார்.

வான் பாதுகாப்பு அமைப்புகளை  உக்ரைனுக்கு விற்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுக ணைகளை அமெரிக்கா அனுப்பும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மிகத் தீவிரமாகி வரும் நிலையில் ரஷ்யாவின் வான் வழித் தாக்குதல் களை எதிர்கொள்ள உக்ரைனின் வான் பாதுகாப்பை பலப் படுத்த இந்த ஏவு கணைகளை அனுப் புவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளை ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிடம் வாங்கி அதன் பிறகு உக்ரை னுக்கு கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு பயன்பாடு  பணியிடங்களை குறைக்கும் நிறுவனங்கள் 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வந்து பிரிட்டனில் உள்ள நிறுவ னங்களில் வேலைகள் பறிக்கப்பட்டன. இதன் பிறகு நிறுவனங்கள்  புதிய நியமனங்களை தவிர்த்து வரு கின்றன என புதிய ஆய்வு ஒன்று வெளி வந்துள்ளது.  இதனால் நிறுவ னங்களில் பணி யிடங்கள் குறைவ துடன் புதிய ஆட் சேர்ப்பும் குறைந்து வருகிறது. இது வேலையின்மையை அதிகரித்து வறுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய தீவில்   நில நடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள தனிம்பர் என்ற தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள தகவல்படி ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக நில நடுக்கம் பதிவாகி யுள்ளது. நிலநடுக் கம் சக்தி வாய்ந்த தாக இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்பட வில்லை. அதே போல இந்திய கடலோரப் பகுதிகளுக்கும் எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்  பதிலடி நடவடிக்கைகள்’

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் அதே நேரத்தில் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தால் பதிலடி நடவடிக்கை களையும் உருவாக் குவோம் என ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் மரோஸ் செஃப்கோ விக் தெரிவித்துள் ளார். மேலும் அவர், நாங்கள் அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனவும் ஆகஸ்ட் 1 க்குள் தீர்வு காண முன்னுரிமை கொடுக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.