போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் சுட்டுக்கொலை
மெக்சிகோ முழுவதும் வன்முறை
மெக்சிகோ சிட்டி,பிப்.24- மெக்சிகோவில் தேடப்பட்டு வந்த மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் கும்பலான ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) அமைப்பின் தலைவன் “எல் மென்ச்சோ” என்ற நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (59) ராணுவத்தால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (பிப்.22) சுட்டுக் கொல்லப் பட்டான். இதைத் தொடர்ந்து அந் நாடு முழுவதும் பயங்கரமான வன் முறைச் சூழல் பரவி வருகிறது. மெக்சிகோவின் குடிமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒமர் கார்சியா ஹார்ஃபுச் இது குறித்துத் தெரிவித்ததாவது: எல் மென்ச்சோ கொல்லப்பட்ட தற்குப் பழிவாங்கும் நடவடிக்கை யாக போதைப்பொருள் கடத்தல் (கார்டெல்) கும்பல் நாடுமுழுவதும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 27 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். ராணுவத்தின் பதில் தாக்குதலில் அக்கும்பலைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்துள்ளனர் என்றார். ஜனாதிபதி உறுதி இந்நிலையில் அந்நாட்டு இடது சாரி ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியை மீட்டெடுக்க அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பல குழுக்களு டன் தொடர்பு கொண்டுள்ள இந்தக் கும்பல் மெக்சிகோவில் இருந்து அந்நாட்டிற்கு பெண்டானில் (Fentanyl), மெத்தாம்பெட்டமைன் மற்றும் கோகோயின் போன்ற போதைப்பொருட்களைக் கடத்தும் மிகப்பெரிய வலையமைப்பை நடத்தி வந்தது. பல ஆண்டு தேடு தலுக்குப் பிறகு எல் மென்ச்சோ கொல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. எல் மென்ச்சோ கொல்லப்பட்ட தகவல் வெளியான சில நிமிடங்களி லேயே, மெக்சிகோவின் 32 மாநி லங்களில் சுமார் 20 மாநிலங் களில் இக்கும்பலுடன் தொடர் புடைய குழுக்களால் வன்முறை உருவாக்கப்பட்டது. பேருந்துகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தீயிட்டுக் கொளுத் தப்பட்டன. சாலைகள் முடக்கப்பட்டன. எல் மென்ச்சோ கொல்லப்பட்டி ருந்தாலும் அவ்வமைப்பின் கட்டமைப்பு பெரும் பாதிப்பை சந்திக்கவில்லை. அவரது வளர்ப்பு மகன் ஜுவான் கார்லோஸ் கோன்சாலஸ் வேலன்சியா புதிய தலைவராக நியமிக்கப்படலாம் எனவும் இதனால் தொடர் மோதல்கள், வன்முறைகள் என சமூகப் பதற்றம் நீடிக்கலாம் என வும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் இந்த கார்டெல் குழுவின் தளபதிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு, அது பெரும் ‘உள்நாட்டுப் போராக’ மாறும் அபாயமும் உள்ளது. அவ்வாறு நடந்தால் அது மெக்சி கோவின் உள்நாட்டுச் சூழலை மிக மோசமாக பாதிப்பதுடன் அமெரிக்காவின் ராணுவத் தாக்கு தலுக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
