world

img

விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியை நோக்கி வந்த சிறுகோளை தடுத்து அனுப்பிய நாசா விண்கலம்

விண்வெளியில் சிறுகோளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளது மிக முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது.

பூமியை நோக்கி மோதும் வகையில் வரும் விண்கல், சிறுகோள் ஆகியவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, அவை பூமி மீது மோதுவதைத் தடுத்து திசைதிருப்புவதற்கான சாத்தியக்கூறுகளை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவின் நாசாவுக்கு சொந்தமான ’டார்ட்’ விண்கலம் டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதையும், அதனால் பூமிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதையும் கண்டுபிடித்தது.பூமியை சுற்று வரும் எதிர்கால அச்சுறுத்தல்களை கண்டறிந்து முறியடிப்பதற்காக இந்த ’டார்ட்’ விண்கலம் ஏவப்பட்டிருந்தது.

இதையடுத்து டிடிமோஸ் பைனரி சிறுகோள் ஆனது பூமி மீது மோதுவதைத் தடுத்து அதை திசைத் திருப்ப நாசா திட்டமிட்டது. இதனையடுத்து அந்த சிறுகோள் மீது’டார்ட்’ விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி நாசா மோத  வைத்தது. அதன்படி ’டார்ட்’ விண்கலம் சரியான பாதையில் பயணம் செய்து பூமிக்கு ஆபத்தாக கணிக்கப்பட்ட சிறுகோளின் மையப்பகுதியை துல்லியமாக தாக்கியது. இந்நிலையில், இரு வாரங்களுக்குப் பிறகு விண்கலம் தாக்கிய சிறுகோள் தனது பாதையை மாற்றியுள்ளதால், நாசாவின் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் சிறுகோளின் சுற்றுப்பாதையை முதன்முறையாக மனிதர்கள் மாற்றியமைத்துள்ளது. மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த சிறுகோளால் அன்றைய காலத்தில் வாழ்ந்த டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

;