world

img

மடகாஸ்கரில் தீவிரமடைந்த போராட்டம் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

மடகாஸ்கரில் தீவிரமடைந்த போராட்டம்  ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி ஓட்டம்

அன்டனனரிவோ,அக்.14-  ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதி ராக நடைபெற்ற பெரும் போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி ராஜோ லினா நாட்டை விட்டு வெளியேறி யுள்ளார். அவர் பிரான்ஸ் நாட்டு விமானத்தில் தப்பித்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.  உலகிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக உள்ள மடகாஸ்கரில் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு, ஊழல், தனியார்மயம், வேலையின்மை, பண வீக்கம், விலைவாசி உயர்வு, மின்சாரம் இல்லாத நிலை என  நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடியால் மக்கள் கடுமையான  பாதிப்புக்குள்ளாகி உள்ளதால் செப்டம்பர் 25 முதல் அவர்கள் அரசுக்கு எதிரான போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போ ராட்டத்திலும் ஜென் இசட் தலைமுறை யினர் பெரும் பங்கு வகித்து வருகின்ற னர். அமைதியாகத் தொடங்கிய இப் பேரணி போராட்டங்களில் காவல்துறை நடத்திய தாக்குதல்கள் வன்முறை உருவாக காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தடியடி கண்ணீர் புகைக் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு என காவல்துறை எடுத்த நடவடிக்கையால் நிலைமை மோசமானது. இத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது மேலும்  போராட்டக்காரர்களின் கோ பத்தை தூண்டியது. இந்நிலையில் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஜனாதிபதி ராஜோலினா நாடாளு மன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். எனினும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நாடாளு மன்றம், ஜனாதிபதி மாளிகை, அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.  இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி  ராஜோலினா பிரான்ஸ் நாட்டின் விமா னத்தின் மூலம் நாட்டை விட்டு வெளியே றியதாகக் கூறப்படுகிறது. ராணுவத்தின் ஒரு பிரிவு, போ ராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உள்ள  நிலையில் மடகாஸ்கர் ஆட்சியை ராணு வம் கைப்பற்றும் என கூறப்படுகிறது.