world

img

பிரேசில் : லூலாவுக்குப் புதிய ஆதரவு

பிரேசிலியா, அக்.6- பிரேசில் ஜனாதிபதியைத் தேர்வு செய்வ தற்கான இரண்டாவது சுற்றுத் தேர்தலில் இடது சாரி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுக்குப் புதிய ஆதரவுகள் கிடைத்துள்ளன. முதல் சுற்றில் பிரேசில் ஜனநாயக இயக்கம் என்ற கட்சி சார்பில் போட்டியிட்ட சிமோன் டெபெட்   49,15,420 (4.2%) வாக்குகளைப் பெற்று மூன்றா வது இடத்தைப் பிடித்தார். இவரது பிரச்சாரத்தில்  இடதுசாரிக் கொள்கைகளையே முன்னிறுத்தி னார். இதனால், லூலாவுக்கு வர வேண்டிய வாக்கு கள் இவருக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும், அப்படி நடக்காமல் இருந்திருந்தால் முதல்  சுற்றே ஜனாதிபதி யார் என்பதைத் தீர்மானித்திருக்கும் என்கிறார்கள். தற்போது அடுத்த சுற்றிற்கு முதலிரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே முன்னேறியுள்ள நிலையில், லூலாவுக்கு சிமோன் டெபெட் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரேசிலின் பெரிய நகரங்களில் ஒன்றான சாவ் பால்லோவில் செய்தியாளர்களைச் சந்தித்த சிமோன் டெபெட், “நம்மைவிடப் பெரிய விஷயத்தை நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது. வெறுப்புப் பேச்சுகளாலும், கொள்கை ரீதி யாகவும் நாடு பிளவுபடுகிறது. பிரேசில் என்ற  இந்த நாட்டை நான் விரும்புகிறேன். இந்த ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தை நான் பெரிதும் மதிக்கிறேன். அதனால், எனக்கு எப்போதுமே இருக்கும் தைரியத்துடன் ஒன்றைக் கூற விரும்புகிறேன். அதற்கு முன்பாக, எனது உடன் பயணிப்பவர்களிடம் வருத்தம் தெரிவிக்க  விரும்புகிறேன். இரண்டாவது சுற்றில் நான் யாருக்கும் ஆதரவாக இல்லாமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். ஆனால், இந்த நாட்டின் நலனை மனதில் கொண்டு லூலாவுக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன்” என்றார்.

முதல் சுற்றில் தனக்கு ஆதரவளித்த சுமார் 50 லட்சம் வாக்காளர்களும் தனது முடிவை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் டெபெட்  வேண்டுகோள் வைத்துள்ளார். அதேவேளை யில், முன்னாள் ஜனாதிபதியும், 91 வயது நிரம்பிய மூத்த அரசியல்வாதியுமான ஹென்ரிக் கார்டோசோவும் இரண்டாவது சுற்றில் தனது வாக்கு, லூலாவுக்கு என்று தெரிவித்துள்ளார். வர்த்தகத்துறை வட்டாரத்தில் பெரும் ஆதரவைக் கொண்டுள்ள கார்டோசோவின் ஆதரவு புதிய  வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தல் நிறைவு பெற்றதில் இருந்து, லூலா வும், போல்சானாரோவும் புதிய ஆதரவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் ஜனாதி பதி மைக்கேல் டெமெர் மற்றும் மூன்று  மாகாணங்களில் ஆளுநர்கள் போல்சானா ரோவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். லூலா எதிர்ப்பு வாக்குகளைத் தனக்கு சாதகமாகத் திருப்ப அவர் முனைந்திருக்கிறார். டெபெட்டின் முடிவு போல்சோனாரோவுக்குப் பின்னடைவு என்று சொல்லப்படுகிறது. வேட்பாளர்கள் பட்டியலில் 35,99,285 (3%) வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்த ஜனநாயகத் தொழிலாளர் கட்சி வேட்பாளர் சிரோ கோம்ஸ் பிரச்சாரமும் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தியே இருந்தது. குறிப்பாக, சிமோன் டெபெட் மற்றும்  சிரோ கோம்ஸ் ஆகிய இருவரின் பிரச்சாரமும் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சானாரோவின் கொரோனா பெருந்தொற்று நடவடிக்கைகள் மீதான விமர்சமாகவே இருந்தது. சிரோ கோம்ஸ் யாருக்கு ஆதர வளிப்பார் என்று இதுவரை அறிவிக்கப்பட வில்லை. வரும் நாட்களில் புதிய திருப்பங்கள்  இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குகள் விபரம் (100 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்)
லூயிஸ் லூலா டி சில்வா
5,72,59,405 (48.4%)
ஜெய்ர் போல்சானாரோ
5,10,72,234 (43.2%)

;