கூகுள் டிரான்ஸ்லேட்டில் 8 இந்திய மொழிகள் உட்பட 24 மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ., சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் டிரான்ஸ்லேட் எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது. இதில் பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் மொழி மாற்றம் செய்து அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழ், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி நேற்றிரவு நடைபெற்ற வருடாந்திர கூகுள் மாநாட்டில், 8 இந்திய மொழிகள் உட்பட 24 மொழிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ., சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 24 மொழிகளில் சமஸ்கிருதம், அஸ்ஸாமி, போஜ்புரி, டோக்ரி, கொங்கனி, மைதிலி, மிசோ மற்றும் மெய்ட்டீலோன்(மணிப்பூரி) ஆகிய 8 இந்திய மொழிகள் அடங்கும்.
இதன்மூலம் கூகுள் டிரான்ஸ்லேட்டில் உலகம் முழுவதும் உள்ள 133 மொழிகளும், 19 இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் உரைகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வசதியுடன் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. குரல் மூலம் மொழிபெயர்ப்பு செய்தல் மற்றும் பிற அம்சங்கள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
இதனால், 30 கோடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.