ஆசிய நாடுகள் உள்நாட்டு வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசியா மற்றும் பசிபிக் துறை இயக்குநராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன் ஆசிய நாடுகள் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் தற்போதுள்ள வர்த்தகப் பதற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க உள்நாட்டுத் தேவையை மையமாகக் கொண்ட வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை அதிகரிப்பது என இரு வழிகளை கடைப்பிடிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹங்கேரியில் புடினை சந்திக்க டிரம்ப் திட்டம்
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ஹங்கேரியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான தொலைப்பேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போர் முடிவுக்கு வந்த பிறகு ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்து வது பற்றியும் பேசியதாக டிரம்ப் கூறியுள்ளார்.
வரலாறு காணாத அளவில் ஹைட்டியில் மக்கள் இடப்பெயர்வு
ஹைட்டியில் இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் 14 லட்சத்தை எட்டியுள்ளது என சர்வ தேச இடப்பெயர்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 36 சதம் அதிகமாகும். அமெரிக்காவின் அரசியல் தலை யீடு காரணமாக நிலையற்ற ஆட்சி, போர் என அந்நாடு வன்முறைகளால் முடக்கப்பட்டு விட்டது. இதனால் தீவிர வறுமை, கொலைகள், பாலியல் வல்லுறவுகள், ஆட்கடத்தல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் காரணமாக மக்கள் ஒரே இடத்தில் வாழமுடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
காசாவில் 83 சதவீத கட்டமைப்புகள் அழிப்பு
இஸ்ரேல் குண்டு வீச்சால் காசா நகரத்தின் பல பகுதிகள் முற்றிலும் தரைமட்டமாக் கப்பட்டுள்ளன. மிகப்பலமாக வீசும் சூறாவளியால் பாதிக்கப்பட்டதற்கு இணையாக குடியிருப்புகள், சுகாதார மையங்கள் என அனைத்து கட்டடங்க ளும் 83 சதவிகிதம் சேதமடைந்து அழிந்து போ யுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு போர் நிறுத்தம் இருந்தாலும் மின்சா ரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் என மக்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் பப்புவா மாகாணத்திலுள்ள அபேபுரா நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. எனினும் அப்பகுதிகளில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை, உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என கூறப்படுகிறது. மேலும் சுனாமி அபாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமஸ் சங்கரா நினைவு தினம் : அணையா புரட்சி நெருப்புக்கு ராணுவ மரியாதை
ஓய்காடுகு,அக்.17- பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியக் கொடுமைகளுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு புர்கினா பாசோவில் புரட்சி நடத்திய கேப்டன் தாமஸ் சங்கராவின் நினைவு தினத்தன்று அந்நாட்டு ஜனா திபதி இப்ராஹிம் தரோர் அஞ்சலி செலுத்தினார். பிரான்ஸ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆப்பிரிக் காவின் சே குவேரா என அழைக்கப்படும் கேப்டன் தாமஸ் சங்கரா, ராணுவத்தின் மூலமாக 1983 ஆம் ஆண்டு புர்கினா பாசோவின் ஆட்சியைக் கைப் பற்றினார். பின் 1983 முதல் 1987 வரை நாட்டின் ஜனாதிபதியாக செயல்பட்டார். இவரது ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்தியத்தி ற்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெ டுத்தார். அந்நாட்டு மக்களின் வறுமையைப் போக் கும் நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், சிறந்த கல்வியையும் வழங்கினார். இந்நிலையில் அந்நாட்டில் உள்ள பிரான்ஸ் ஆதரவு நபர்களின் உதவியுடன் பிளேஸ் காம்பாவோரே என்பவன் தலைமையிலான ஒரு சதியின் மூலம் 1987 ஆகஸ்ட் 15 அன்று சங்கரா படுகொலை செய் யப்பட்டார். இந்நிலையில் அவரது நினைவகத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில் அந் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் தரோர், பிரதமர் இம்மானுவேல் மற்றும் அதிகாரிகள் சங்கரா விற்கு புகழஞ்சலி செலுத்தினர். “கண்ணியமான, இறையாண்மையுள்ள, வளமான புர்கினா பாசோவை உருவாக்க சங்கரா வின் அர்ப்பணிப்பும் போராட்டமும் நிகரற்றவை”. சஹேல் நாடுகளின் கூட்டமைப்பை பலப்படுத்த வும், மேற்கத்திய நாடுகளுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு நமது இறையாண்மையை பாதுகாக்கவும் தற்போது நாம் செயல்படுத்தி வரும் நடவடிக்கைகளுக்கு எப்போதும் ஊக்கமளிப்பவ ராக சங்கரா விளங்குகிறார். சங்கரா ஊக்குவித்த தேசப்பற்று மற்றும் உள்நாட்டு வளர்ச்சி இன்றும் பொருத்தமானதாக உள்ளது. அவரது செயல்க ளும் வார்த்தைகளும் உத்வேகத்தின் வற்றாத நதி யாகவும், புதிய புர்கினா பாசோவை கட்டமைப்பதை நோக்கி மக்கள் முன்னேற்றப் புரட்சிக்கு வழிகாட் டும் திசைகாட்டியாகவும் உள்ளன என தரோர் குறிப் பிட்டுள்ளார்.சங்கராவின் புரட்சி நெருப்பு தொடர்ந்து எரி யும் விதமாக, இனிமேல் ஒவ்வொரு மாதத்தின் முதல் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு அந் நினைவகத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
