world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்

ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்கரை காம்சட்காவில் 6.6 ரிக்டர் அளவிற்கு வியாழனன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக புதனன்று 8.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட மிக சக்தி  வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஹவாய் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. சுனாமி தாக்கம் அதிகமாக ஏற்படும் பகுதி களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளி யேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போதைய புதிய நிலநடுக்கம் மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளது.  

இந்திய தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு பாராட்டு

சிங்கப்பூரில் சாலையில் ஏற்பட்ட திடிர் பள்ள த்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிச்சை உடையப்பன் சுப்பையா தலைமையிலான ஏழு இந்திய தொழிலாளர்கள் விரைந்து மீட்டுள்ளனர். குழாய் உடைந்து கொட்டிய தண்ணீரால் பள்ளம் நிரம்பி அப்பெண் சாகும் முன் இந்த மீட்புப் பணி நடந்துள்ளது. இந்நிலையில் அந்த தொழிலாளர்களை சிங்கப்பூர் அரசு பாராட்டியுள்ளதுடன் பொதுமக்களிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் 43 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

80,000 குழந்தைகள் காலராவால் பாதிக்கப்படும் அபாயம் 

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் மழைக்காலம் துவங்கும் நிலையில் சுமார் 80,000 குழந்தைகள் காலரா வால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என ஐ.நா. எச்சரித்துள்ளது.காங்கோ, நைஜீரியாவில் தீவிரமாக பரவும்  நோய்கள்  எல்லை தாண்டி அதன் அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயம் உருவாகி யுள்ளது என ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெசின் துணை செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தை  அங்கீகரிக்க கனடா திட்டம்

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா  பொது அவையில் பாலஸ்தீன அரசை  அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள் ளார். மேலும் இது இரு நாடுகள் தீர்வுக்கான நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கான முக்கிய கொள்கை மாற்றம் என்றும்  அவர் தெரிவித்துள் ளார். சில நாட்களுக்கு முன் பிரான்ஸ், இங்கி லாந்து அரசுகள் பாலஸ்தீன அரசை அங்கீ கரிக்கப் போவதாக அறிவித்திருந்தன. பாலஸ்தீனர் களின் மீதான அக்கறையால் அன்றி அமெரிக்கா வுடன் ஏற்பட்டுவரும் முரண்பாட்டின் காரணமாக இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அமெரிக்காவில்  போர்விமானம் விபத்து 

கலிபோர்னியாவின் கடற்படை தளத்திற்கு அருகில் அமெரிக்காவின் எப்-35 சி ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழும் நிலையில் அதிலிருந்து வெளியேறிய விமானி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் தற்போதுவரை அறியப்படவில்லை. சில நாட்களில் விபத்து குறித்து காரணம் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. அவசரகால குழுவினர் சம்பவ இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.