world

img

அமெரிக்காவில் முதல்முறையாக திருவள்ளுவரின் பெயரில் ஒரு தெரு!  

அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரை ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது.  

வெர்ஜினியாவில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் திருவள்ளுவரின் பெயரை முதன்முறையாக ஒரு தெருவிற்கு சூட்டப்படவிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘வள்ளுவர் வே’ என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த தெரு அழைக்கப்படும்.

இந்த அறிவிப்பை வெர்ஜினியா சபை உறுப்பினர் டான் ஹெல்மர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  திருவள்ளுவரின் திருக்குறள் புகழ் உலகப் புகழ்பெற்று இருந்தாலும் அவரது பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக ஒரு தெரு அமைக்கப்பட உள்ளது பெருமைக்குரியது.