world

img

ஓசோன் படலத்திற்கு புதிய ஆபத்து?

வெலிங்டன், பிப்.14- வர்த்தக ரீதியில் விண்வெளி சுற்றுலா அதிகரிப்பது ஓசோன் பட லத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள னர். பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் குளோரோ ஃபுளூரோ கார்பனைத் தடை செய்வதில் சர்வதேச அள வில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப் பட்டது. சுற்றுச்சூழல் விவ காரத்தில் இந்த நடவடிக்கை பெரும் வெற்றியாகக் கொண்டாடப் பட்டது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவது தாமதமானது. ஆனால், புதிய ஆபத்தை சர்வதேச சமூகம் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் விண்வெளி சுற்றுலா, கிடைத்த வெற்றியைத் தகர்த்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுகுறித்து நியூசிலாந்தில் உள்ள காண்டர்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். செயற்கைக் கோள்களை ஏவும் ராக்கெட்டுகளில் இருந்து வெளியா கும் உமிழ்வுகள் தற்போது குறை வான அளவே இருக்கிறது என்று  கூறும் அவர்கள், வரும் ஆண்டு களில் அதிகரிக்கும் என்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரை யில், “ராக்கெட்டுகளை செலுத்து வதன் மூலம் வெளியாகும் பல பொருட்கள் ஓசோன் படலத்தைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது. கடு மையான அச்சுறுத்தலாக இது இருக்கப் போகிறது” என்று எழுதப்பட்டுள்ளது. ஓசோன் படலம் என்பது பூமிப் பந்தின் நிலப்பரப்பில் இருந்து 15  முதல் 50 கிலோ மீட்டர் வரையில்  படர்ந்திருக்கிறது. சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதாக் கதிர்களை முழுமையாக இந்த படலம் உள்வாங்கிக் கொள்கிறது. அக்கதிர்கள் மனிதர்களுக்கும், காட்டுப்பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். குளோரோ ஃபுளூரோ கார்பன் மற்றும்  பாதிப்பை ஏற்படுத்தும் பிற வேதிப்பொருட்கள் ஓசோன் பட லத்தின் அளவைக் குறைத்துள்ளது. இந்தப் பாதிப்பு, குறிப்பாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் ஏற்பட்டுள்ளன. தென் துருவத்தில்தான் பாதிப்புகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடி ந்திருக்கிறது. 1979 ஆம் ஆண்டில் இருந்தே இந்தப்பகுதியில் ஒரு பெரிய ஓட்டை ஓசோன் படலத்தில் விழுந்துள்ளது.

கொழிக்கும் வர்த்தகம்

காண்டர்பரி பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரையில், “ராக்கெட்டுகளை ஏவு வது பூமியின் பாதுகாப்புப் பட லத்திற்கு ஆபத்தை உருவாக்கு கிறது. பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் மற்றும் துகள்களை நேரடியாகவே வளிமண்டலத்தின் மத்திய மற்றும் மேற்பரப்பில் உமிழ் கின்றன. ராக்கெட்டுகளின் எரியும் எரிபொருள் மற்றும் விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்து விட்டுத் திரும்பும் விண்கலங்களின் குப்பைகள்  கூடுதல் பாதிப்பை ஏற் படுத்துகின்றன” என்று எழுதப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட 70 நாடுகள் விண்வெளிக் கழகங்களை உரு வாக்கி வைத்துள்ளன. அதோடு தனியார் விண்வெளி நிறு வனங்களும் உருவாக்கப்பட்டுள் ளன. பெரும் கோடீஸ்வரர் களுக்கு மத்தியில் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் விண்வெளிக்கு விண்கலங்கள் செலுத்தப்படுவது பெரும் அளவில் அதிகமாகப் போகிறது. ராக்கெட் மற்றும் எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றில் தொழில்நுட்ப மேம்பாடு அடையாத வரையில், இந்த உமிழ்வுகள் உலகின் ஒவ் வொரு பகுதியிலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள். விண்வெளி சுற்றுலா லாபகர மாக இருப்பதால் 2022 ஆம் ஆண்டில் இந்த சந்தையின் மதிப்பு 145 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. 2030 ஆம் ஆண்டில் இது மூன்று மடங்கு அதிகரித்து 430 கோடி அமெரிக்க டாலராக அதி கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. லாபத்தைக் குறிவைத்து தனியார் நிறுவனங்களும் பெரும் அளவில் விண்வெளி சுற்றுலாவில் ஈடுபடப் போகின்றன என்பது ஆபத்து அதிகரிப்பதையே காட்டு கிறது.

முறைப்படுத்துதலே தீர்வு

வளிமண்டலத்தைப் பாதுகாக்க ஒழுங்கமைக்கும் பணியை முறைப்படுத்துவதே தீர்வாக அமையும் என்று காண்டர்பரி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 1987 ஆம் ஆண்டில் மாண்ட்ரீல் நகரில் போடப்பட்ட சர்வதேச உடன்பாட்டை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பாதிப்பை ஏற்படுத்தும் குளோரோ ஃபுளூரோ கார்பன்களை தடை செய்வதில் வெற்றி கிடைத்தது. “உலக அள வில் இதுவரை போடப்பட்ட சுற்றுச் சூழல் உடன்பாடுகளில் இதுதான் பெரும் வெற்றியைத் தந்தது” என்று  ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.