world

img

அமெரிக்காவின் போர் அரசியலால் 11.7 கோடி மக்கள் கட்டாய இடப்பெயர்வு

நியூயார்க், ஜூன் 25- அமெரிக்காவின் ஏகாதி பத்திய போர் அரசியலால் 11.7  கோடிக்கும் அதிகமான மக்கள் கட்டாயமான முறையில் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.  ஆயுத மோதல் இடம் மற்றும் நிகழ்வுகளின் தரவு (ACLED ) அறிக்கையின் படி,  உலகம் மிக வும் வன்முறைமயமாகி வருகிறது. 2024 ஆம் ஆண்டு மட்டும் 6 பேரில் ஒருவர் ஆயுத வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசி யல் வன்முறைச் சம்பவங்கள் 22 சதவீதம் அதிகரித்துள்ளது என வும் அவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க அரசு தனது ஆதிக்கத்தை வலுப்படுத்துவ தற்காக ஆயுதங்களையும் போர்க ளையும் பிற உலக நாடுகளின் மீது திணிப்பது, பொருளாதாரத் தையே ஆயுதமாக மாற்றுவது என வன்முறைகளை கடைப்பிடித்து வருவதுடன், தனது கூட்டாளி நாடுகளையும் இந்த வன்முறை யில் ஈடுபட ஊக்குவித்து வருகிறது.   ஐ.நா. அவையில் பல போர் நிறுத்த தீர்மானங்களை தனது ‘ரத்து அதிகாரம்’ மூலம் தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும் சர்வ தேசச் சட்டங்களை மீறி குற்ற மிழைக்கும் அதன் கூட்டாளி நாடு களையும் காப்பாற்றி வருகிறது. இந்த ஆதிக்க அரசியலுக்காக அமெரிக்கா 1,53,700 கோடி டாலர்களை ராணுவத்திற்காக செலவு செய்கிறது. அது மட்டு மன்றி இஸ்ரேல், ஜெர்மனி, ஜப்பான், ஜி-7 கூட்டமைப்பு உள்ளிட்ட அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் சேர்ந்து 2,13,000 கோடி டாலர்கள் வரை ஆயுத உற்பத்திக்காகவும், போர்க ளுக்காகவும் செலவு செய்து வருகின்றன.  இது மட்டுமின்றி பல நாடு களின் மீது பொருளாதார தடை களை விதித்துள்ளது அமெரிக்கா. இதனால் உருவாகும் பஞ்சத்தின் காரணமாக போர்களால் ஏற்படும் பலி எண்ணிக்கைக்கு இணை யான பலி எண்ணிக்கை பொரு ளாதார தடைகளாலும் ஏற்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதங்கள் நேரடியாக மட்டுமின்றி கள்ளச் சந்தைகளில் பல நாடுகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவா தக் குழுக்களுக்கு விற்பனை செய் யப்படுவதால் அந்நாடுகளில் உள் நாட்டுப் போர் தூண்டப்படுகிறது.  இவ்வாறு மறைமுக மற்றும் நேரடி காரணங்களினால் 2023 ஆம் ஆண்டு மட்டும் உலகளவில் 2.72 கோடி  மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளி யேற வேண்டிய கட்டாயம் உரு வாக்கப்பட்டது. அமெரிக்காவின் போர்களால் 11.73 கோடி  மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் இந்த கட்டாய இடப்பெயர்வு 2022 ஆம் ஆண்டை விட 8 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கது.