world

img

தைவானில் நிலநடுக்கம்  

தைவானில் நேற்று 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.    

தைவான் கடற்கரை அருகே 5.7 அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதைவானின் கடலோர நகரமான ஹெங்சுன் தென்கிழக்கே கடலில் 44 கி. மீட்டர் (27 மைல்) ஆழத்தில் அதன் மையம் இருந்ததாகவும் தெரிவித்தது.  

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத விவரங்கள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.    தைவான் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் 'நெருப்பு வளையம்' எனப்படும் நில அதிர்வுச் செயலில் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கத்து.