டமாஸ்கஸ்/டெல்அவிவ்,டிச.11- துருக்கி, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பயங்கரவாதிகள் மூல மாக சிரியாவில் அல் அசாத் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்த பிறகு இஸ்ரேல் ராணு வம் சிரியா எல்லைக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவ நிலைகளை தாக்கி வருகிறது. சிரியா தலைநகருக்கு தெற்கு பகுதியில் 20 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 20 கிரா மங்களை கைப்பற்றியுள்ளதாகவும் தெரி வித்துள்ளனர்.
ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (HTS), ஐஎஸ் எஐஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட பல பயங்கரவாதிகள் குழுக்களை ஒன்றிணைத்து அந்நாட்டின் ஆட்சிக்கவிழ்க்கப்பட்டதை அந்நாட்டு மக்களும், பல ஊடகங்களும் கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் சிரியா வில் வன்முறைகளும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. ஐஎஸ்எஐஸ் பயங்கரவாதிகள் சிறுபான்மை மக்களை நடுரோட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்து வருகின்றனர்.
மறுபுறம் இஸ்ரேல் ராணுவமும் ஆக்கிர மித்து வைத்துள்ள கோலன் குன்றுகள் வழியாக சிரியாவிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதுவரை சுமார் 80 சதவீதமான சிரியா ராணுவத்தலங்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு ராணுவம் டமாஸ்கஸை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இந்த நகர்வை தற்போது சிரியாவை கைப்பற்றி யுள்ள பயங்கரவாதிகளின் குழுக்கள் தடுக்க வில்லை.
பெரும்பாலான ஊடகங்கள் இதை சாதாரண நிகழ்வாக கடந்து போகும் சூழலில், பயங்கரவாதிகளை பயன்படுத்தி இஸ்ரேல் தனது அகண்ட இஸ்ரேல் ( Greater israel) திட்டத்தை அரகேற்றி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். கோலன் குன்றுகள் வழியாக சிரியாவின் தலைநகரை இஸ்ரேல் ராணுவத்தால் எளிதாக கைப்பற்றிவிட முடியும் அவ்வாறு கைப்பற்றி விட்டால் சிரியா மூலம் லெபனான் நாட்டையும் அங்கு இயங்கி வருகிற ஹிஸ்புல்லாவையும் ராணுவத்தின் மூலம் இஸ்ரேலால் எளிதாகச் சுற்றிவளைத்து தாக்க முடியும்.
ஏற்கெனவே எச்டிஎஸ் பயங்கரவாதிகள் கைப்பற்றி ஆட்சி செய்து வந்த பகுதிக்கு பிரத மராக இருந்த முகமது அல் பஷீர் சிரியாவின் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.