states

img

ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல்: டிஆர்​இ​யு - சிஐடியு வெற்றி!

தென்னக ரயில்வே மண்டலத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில், தட்ஷிண ரயில்வே எம்ப்​ளா​யிஸ் யூனியன் (டிஆர்​இ​யு - சிஐடியு) 33.67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 
ரயில்வே தொழிங்​சங்க அங்கீ​கார தேர்தல், கடந்த டிச 4, 5, 6 ஆகிய தேதி​களில் நடைபெற்​றது. தென்னக ரயில்​வே​ மண்டலத்தில்  தட்ஷிண ரயில்வே எம்ப்​ளா​யிஸ் யூனியன் (டிஆர்​இ​யு), தட்ஷின ரயில்வே கார்​மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்​ஆர்​எம்யு) ஆகிய தொழிங்​சங்​கங்கள் தேர்​தலில் போட்​டி​யிட்டன. இத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதுவரை, தொழிற்சங்க அங்கீகார தேர்தலில், தட்ஷிண ரயில்வே எம்ப்​ளா​யிஸ் யூனியன் (டிஆர்​இ​யு - சிஐடியு) 33.67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்​ஆர்​எம்​​யு) 34% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.