2022-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் வென்றுள்ளார்.
மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் 2022ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த 3 தினங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். 'L' Occupation என்ற நூலை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.