கொழும்பு
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை நாட்டில் நெருக்கடியை சரிகட்ட வேண்டிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதாவது 26 அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் என 2 பேர் மட்டுமே பதவியில் நீடித்த நிலையில், திங்களன்று நிதியமைச்சகம், கல்வி உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபட்சேவுக்கு மாற்றாக அலி சப்ரி புதிய நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவர்களுடன் ஜி.எல். பெய்ரிஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தனே கல்வித் துறை அமைச்சராகவும், ஜான்ஸ்டன் ஃபெர்னாண்டோ நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். இவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி கொத்தபய ராஜபட்சே பதிவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் நிதியமைச்சர் அல் சப்ரி தான் பதவியேற்ற்ற 24 மணிநேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.