tamilnadu

img

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு கோவிட்

திருவனந்தபுரம்:
கேரள நிதியமைச்சர் டாக்டர் டி.எம். தாமஸ் ஐசக்கிற்கு கோவிட் உறுதியானது. ஞாயிறன்று நடத்தப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில் இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சரின் தனிப்பட்ட ஊழியர்கள் உட்பட பலர் கண்காணிப்பில் உள்ளனர்.