தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்கப் புவியியல் நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், பெருவின் தெற்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, நள்ளிரவு 12.36 மணிக்கு ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கதின்போது பதிவான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. உயிரிழப்புகள் மற்றும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. பசிபிக் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் அமைந்துள்ளதால், பெரு நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.