world

img

ரஷ்யா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி  

ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.  

ரஷ்யா – சைபீரியா பகுதியில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 300 பேர் வேலை செய்து வந்தனர். திடீரென சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 11 பணியாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 3 மீட்புப்டையினர் உயிரிழந்தனர். மேலும் 6 மணி நேரத்திற்கான ஆக்சிஜன் மட்டுமே இருந்த நிலையில், காணாமல் போன 50 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.