states

img

மேற்கு வங்காளத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்து – 4 பேர் பலி  

மேற்கு வங்காளத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.  

மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் அருகே திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம் நேற்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.  இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஷியாமல் பவுரி, பிங்கி பௌரி, அன்னா பௌரி மற்றும் நடபர் பவுரி என அடையாளம் காணப்பட்டது. இதில் மற்றொரு கிராமவாசி ஒருவர் காயமடைந்தார்.  

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அபிஷேக் குப்தா கூறுகையில்,”திறந்த குழியின் ஒருபகுதி இடிந்து விழுந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. பின்னர் 4 உடர்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.