இராமநாதபுரம், பிப்.19- இராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் பிறந்த நான்கு நாட் கள் ஆன பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேர் பலியா கினர். இராமநாதபுரம் மாவட் டம், வேதாளையை சேர்ந்த மீனவர் சேதுராஜா என்பவ ரின் மகள் சுமதி திண்டுக்கல் நத்தம் பகுதியில் வசித்து வருகிறார். மகளின் தலை பிரவத்திற்காக சொந்த ஊரான வேதாளைக்கு வந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுமதி ( 20 )க்கு 16 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஞாயிற்று கிழமையன்று மருத்துவ மனையிலிருந்து ஆட்டோ வில் வீட்டிற்கு கிளம்பினர். ஆட்டோவில் சுமதி, அவரது பச்சிளம் குழந்தை மற்றும் கணவர் சின்ன அடைக்கலம், தாய் காளியம்மாள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் ( 55)என 5 பேரும் ஆட்டோ வில் வேதாளை சென்று கொண்டிருந்தனர். இராமநாதபுரம் நதிப் பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சென்னை பதிவு எண் கொண்ட கார் மோதியது. இதில், பச்சிளம் குழந்தை யின் தாய் சுமதி, ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். ஆபத்தான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தை, சுமதி கணவர் சின்ன அடைக் கலம்,சுமதியின் தாய் காளி யம்மாள் ஆகிய மூன்று பேரையும் மீட்டு ராமநாத புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கார் ஓட்டுநர் விக் னேஷ் உச்சிப்புளி காவல் நிலையத்தில் ஆஜராகி உள்ளார். இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த பச்சி ளம் குழந்தை, சின்ன அடைக்கலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்னர். இது குறித்து உச்சிப்பளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.