world

img

ரஷ்யாவில் புதிதாக இரண்டு இந்திய தூதரகங்கள் திறப்பு!

ரஷ்யாவில் புதிதாக இரண்டு இந்திய தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் மற்றும் கசான் நகரங்களில் இந்தியாவின் தூதரகங்களை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ, ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார், ஸ்வெர்ட்லோவ்ஸ்க் மற்றும் தத்தர்ஸ்தான் மாநிலங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர், புதிய தூதரகங்கள் மூலம், இந்தியா-ரஷ்யா இடையிலான அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் மேலும் வலுபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.