world

img

காலத்தை வென்றவர்கள் : ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயெவ்ஸ்கி நினைவு நாள்...

தஸ்தயெவ்ஸ்கி 1821ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் நாள் பிறந்தார்.இவர் ரஷ்ய மொழி புதின எழுத்தாளரும், சிறுகதை ஆசிரியரும் கட்டுரையாளரும், பத்திரிகையாளரும், தத்துவவாதியும் ஆவார். 19 ஆம்நூற்றாண்டு ரஷ்யாவின் சிக்கலான அரசியல்,சமூக, ஆன்மீகத் தளங்களில் மனித மனதின்ஆழங்களை ஆராய்பவை இவரது படைப்புகள். பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் குறிப்பிடத்தக்க படைப்புகள்:கரமசோவ் சகோதரர்கள், குற்றமும் தண்டனையும், அசடன், வெண்ணிற இரவுகள், துணைவர்(கள்), மரியா திமித்திரியெவ்னா இசாயெவா.தன்னுடைய இருபதுகளில் எழுத ஆரம்பித்தவர் 11 நாவல்களும் மூன்று குறுநாவல்களும் 17 சிறுகதைகளும் எழுதியுள்ளார்.  நிறைய புனைவு இல்லாதவற்றையும் எழுதியுள்ளார்.

இலக்கியவிமர்சகர்கள் இவரை உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த உளவியலாளர்களில் ஒருவராகக் கூறுவதும் உண்டு. இவர் 1864ல் எழுதிய “இருளுலகிலிருந்து நாட்குறிப்புகள்” தொடக்க கால இருத்தலியல் படைப்புகளில் ஒன்று.ரஷ்யப் பேரரசை விமர்சித்ததால் இவரின் புத்தகங்கள் தடைசெய்யப்பட்டன. இவரின் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை விவாதித்த இலக்கியஅமைப்பில் இருந்தமைக்காக இவர் 1849ல் கைது செய்யப்பட்டார். இவருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை கடைசி நிமிடங்களில் ரத்தானது. தண்டனை குறைக்கப்பட்டு சைபீரியச் சிறையில் நான்கு ஆண்டுகளைக் கழித்த பிறகு மேலும் ஆறு ஆண்டுகள் கட்டாய ராணுவப் பணியில் அமர்த்தப்பட்டார்.இதற்குப் பிறகான வருடங்களில் தஸ்தயெவ்ஸ்கி பத்திரிகையாளராகவும், பல்வேறு இதழ்களைத் தொகுப்பவராகவும் பதிப்பிப்பவராகவும் இருந்திருக்கிறார். “எழுத்தாளனின் நாட்குறிப்பு” என அது வெளியாகியுள்ளது. இவருடையநூல்கள் 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இவரது “வெண்ணிற இரவுகள்” என்ற கதை “இயற்கை” என்ற தமிழ்த் திரைப்படமாக 2003 ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் 1881 பிப்ரவரி 9 ஆம் நாள் மறைந்தார்.

பெரணமல்லூர் சேகரன்