india

img

காலத்தை வென்றவர்கள் : முற்போக்குக் கலைஞர் ஹபீப் தன்வீர் பிறந்த நாள்...

“ஹபீப் ஸாப் என்று நண்பர்களால் அழைக்கப்படும் ஹபீப் தன்வீர் ஹிந்தி, உருது ஆகிய மொழிகளில் சிறந்த நாடகாசிரியரும், நாடக இயக்குநரும், விமர்சகரும், கவிஞரும், நடிகரும் ஆவார். ஹபீப்தன்வீர் செப்டம்பர் 1, 1923ல் சத்தீஸ்கர்மாநிலம் ராய்ப்பூரில் பிறந்தவர்.இவரது புகழ்பெற்ற நாடகங்கள் ஆக்ரா பஜார் (1954), சரண்தாஸ் (திருடன்) சோர் (1975). இவர் சபாக்களில் நடந்துவந்த நாடகங்களை கிராமங்களுக்கு அழைத்து வந்தவர். அவரது நாடகங்களில் பெரும்பாலானவை சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் பிரச்சனைகளை பேசுபவை. அவரது நாடகக் குழு புதிய நாடகம் (நயாதியேட்டர்) என்றழைக்கப்பட்டது.அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும்மக்கள் நாடக மன்றம் ஆகிய அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தவர். இவ்வமைப்புகளில் அமைப்பாளர், செயலாளர் என பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு செயல்பட்டவர். இவர் முற்போக்கான நாடகங்களை எழுதியும் நடித்தும் இயக்கியும் பன்முகத் தன்மையுடன் விளங்கினார். இவர் சப்தர் ஹஷ்மி நினைவு அறக்கட்டளையின் தலைவராகவும் 2003 முதல் 2009 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவர் 2009ஆம் ஆண்டு ஜுன் 8 அன்று மறைந்தார்.இவர் பல்வேறு தேசிய சர்வதேசிய விருதுகளை பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். 

பெரணமல்லூர் சேகரன்