பிலிப்பைன்ஸின் மானாய் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸின் மானாய் நகரின் கிழக்கு தென்கிழக்கே 51 கிலோமீட்டர் ஆழத்தில் அந்நாட்டு நிலவரப்படி புதன்கிழமை மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவுகோலில் 6 ஆக பதிவானதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், 51.33 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், முதலில் 6.9827 டிகிரி வடக்கு அட்ச ரேகைக்கும் மற்றும் 126.9453 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருக்கும் என தீர்மானிக்கப்பட்டதாக ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.