தெற்கு பிலிப்பைன்சில் இன்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவாகி உள்ளது.
தெற்கு பிலிப்பைன்சில் உள்ள சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகயுள்ளதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது நிலநடுக்கம் பயாபஸ் நகரிலிருந்து வடகிழக்கில் 75 கி. மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் அகுசன் டெல் சுர் மற்றும் சூரிகாவோ டெல் நோர்ட்டே ஆகிய மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.